ADDED : அக் 16, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி 45. இவர் அக்.14ம் தேதி காலை 9:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேளாரேந்தலுக்கு சென்றார்.
மாலை 5:30 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டும், உள்ளே இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது. பீரோவில் பொருட்கள் ஏதும் இல்லாததால் திருட வந்த நபர்கள் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.
பரமேஸ்வரி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.