ADDED : அக் 16, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருமாஞ்சோலையில் நடந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமு வரவேற்றார். மாநில துணை தலைவர் என்.பழனிச்சாமி மாநாட்டில் துவக்க உரை ஆற்றினார்.
மாநில துணை தலைவர் முத்துராமன், வீரபாண்டி, விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொது செயலாளர் ரவீந்திரன் மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
தீர்மானம்: மாநாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு அரசு, ஆலை நிர்வாகம் ரூ.5500 என நிர்ணயம் செய்ய வேண்டும். 2013 முதல் 2017 வரையிலான பாக்கி தொகை ரூ.1200 கோடியை தமிழக அரசும், சர்க்கரை துறை ஆணையம் பெற்றுத்தர வேண்டும் என்பது உட்பட 13 தீர்மானங்களை நிறைவேற்றினர்.