/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமாதானம் பேச வரவழைத்து அடித்து கொலை: மூவர் கைது
/
சமாதானம் பேச வரவழைத்து அடித்து கொலை: மூவர் கைது
ADDED : அக் 16, 2025 11:43 PM
பூவந்தி: பூவந்தி அருகே மணப்பட்டியில் போதையில் ஏற்பட்ட தகராறில் சமாதானம் பேச சென்றவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மணப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் 24, அக்., 7ம் தேதி இலுப்பகுடி வி.ஏ.ஓ., அலு வலகம் முன் போதை யில் அதே ஊரைச் சேர்ந்த சங்கையா 50, என்பவரை தாக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக சமாதானம் பேச பிரகாஷ் தந்தையான கிருஷ்ணன் 48, என்பவரை சங்கையா தரப்பு வரவழைத்துள்ளது. சமாதானத்தின் போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் சங்கையா 50, பஞ்சமுத்து45, முனியாண்டி, மற்றொரு கிருஷ்ணன் தாக்கியதில் கிருஷ்ணன் மதுரையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிர் இழந்தார்.
பூவந்தி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சங்கையா, பஞ்ச முத்து, முனியாண்டி ஆகிய மூவரை கைது செய்து மற்ற ஒருவரை தேடி வருகின்றனர்.