/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: ஆட்டோ டிரைவர் கைது
/
மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: ஆட்டோ டிரைவர் கைது
மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: ஆட்டோ டிரைவர் கைது
மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜன 15, 2025 12:27 AM

காரைக்குடி; சிவகங்கை மாவட்டம், பள்ளத்துார் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் நேற்று மீண்டும் பெட்ரோல் குண்டு வீச வந்த ராஜேஷ் பாண்டியை 25, போலீசார் கைது செய்தனர்.
பள்ளத்துார் ராஜசேகர் மகன் ஆட்டோ டிரைவர் ராஜேஷ்பாண்டி 25. இவரது தந்தை அடிக்கடி மது அருந்தி வந்தார். இதில் கோபமுற்ற ராஜேஷ்பாண்டி, 2023 மார்ச் 3 இரவு பள்ளத்துாரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை (எண்:7721) மீது பெட்ரோல் குண்டு வீசினார்.
இதில் கடையில் இருந்த விற்பனையாளர் இளையான்குடி அருகே இண்டங்குளத்தை சேர்ந்த அர்ச்சுனன் 46, பலத்த காயமுற்றார். கடையில் இருந்த பணம், மதுபாட்டில்கள் எரிந்தன.
மதுரையில் சிகிச்சையில் இருந்த அர்ச்சுனன் 2023 மார்ச் 15 ம் தேதி உயிரிழந்தார். ராஜேஷ் பாண்டியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த ராஜேஷ்பாண்டி நேற்று முன்தினம் இரவு அதே மதுக்கடைக்கு பெட்ரோலுடன் சென்று, குண்டு வீச முயற்சித்தார். அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளத்துார் போலீசார் ராஜேஷ்பாண்டியை மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.