/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
/
காரைக்குடி கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
ADDED : ஆக 26, 2025 03:37 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீ ராஜராஜன் இன்ஜி., கல்லுாரிக்கு யு.ஜி.சி., தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப் புதுார் ஸ்ரீ ராஜராஜன் இன்ஜி., கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான ஆவணங்கள் பல்கலை மானியக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வு செய்த மானிய குழு கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளது.
இதன் மூலம் கல்லுாரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும் பல்கலை அனுமதியோடு தேர்வுகளை நடத்திக் கொள்ளவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தங்கள் விருப்பமான பாடத்தை தேர்வு செய்ய முடியும்.
பல்கலை மானியக் குழு வழங்கிய சான்றிதழை ஐ.க்யூ.ஏ.சி., இயக்குனர் ஆண்ட்ரூ வழங்க ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழும தலைவர் சுப்பையா பெற்றுக் கொண்டார். முதல்வர் சிவக்குமார் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.