ADDED : அக் 08, 2024 04:52 AM
சிவகங்கை : இயற்கை விவசாயிகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்குடன் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து, சான்றுடன் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும்.
இந்த விருது பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnhorticulture.tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அக்., 15க்குள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு ஒரு விவசாயியை தேர்வு செய்து, மாநில குழுவிற்கு பரிந்துரை செய்யும், என்றார்.