/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி மாணவர்களுக்கு அக்னிவீர் குறித்த விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு அக்னிவீர் குறித்த விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு அக்னிவீர் குறித்த விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு அக்னிவீர் குறித்த விழிப்புணர்வு
ADDED : டிச 14, 2025 06:12 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் இந்திய விமானப்படை சார்பில் மாணவர்களுக்கு, அக்னிவீர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய விமானப்படையில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு குறித்தும், விண்ணப்பிப்பது குறித்து சென்னை இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அதிகாரிகள் மூலம், காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு வாகன எல்.இ.டி., திரை மூலம் விமானப்படையின் பணிகள் குறித்தும் சாகசங்கள் குறித்தும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, அழகப்பா மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றனர்.
இந்திய விமானப்படை தேர்வுக்குழு அதிகாரிகள் மூர்த்தி மற்றும் பிண்ட் பேசினர். அழகப்பா மாதிரி பள்ளி, எஸ்.எம்.எஸ்., பள்ளி, மூ.வி., பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விமானப்படை அதிகாரிகள் கூறுகையில்: இந்திய விமானப்படை சார்பில் மாணவர்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்குகிறது. பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்து தெரிவதில்லை.
அக்னிவீர் குறித்து அனைத்து தரப்பு மாணவர்களும் அறிந்திட, அக்னி வீர் விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். விரைவில் பயிற்சி வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பட்டுக்கோட்டை புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு கன்னியாகுமரியில் முடிவடையும்.

