ADDED : ஜன 02, 2026 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் இணைந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் கல்வி தொடர்பான பயிற்சி, குழந்தை திருமணம், குடும்ப வன்முறை சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்து பேசினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் ராமாயி, அனுசுயா உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

