/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
/
கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
ADDED : ஜன 02, 2026 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் உடல் உழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகி உடையான் வரவேற்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தில்லைவனம் முன்னிலை வகித்தனர். நிர்வாகி குஞ்சரம் தீர்மானம் வாசித்தார். மாவட்ட பொது செயலாளர் காளைலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வங்கி கடன் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிர்வாகி கண்ணன் நன்றி கூறினார்.

