ADDED : அக் 21, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் ப.உதயகணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சமீனா வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய அறுவை சிகிச்சை நிபுணர் முத்து சுப்பிரமணிய ராமசாமி மார்பக புற்று நோயின் அறிகுறி, ஆரம்ப கால கண்டறிதலின் முக்கியத்துவம், முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் நோயை எதிர் கொள்வதில் விழிப்புணர்வு குறித்து விளக்கினார். செவிலியர் தேவி செயல்முறை விளக்கம் அளித்தார்.
