/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலையில் விழிப்புணர்வு பிரசாரம்
/
அழகப்பா பல்கலையில் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : டிச 20, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ாரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் சார்பில் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா நடந்தது.
சமூக சமத்துவ மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கட்டுரை பேச்சு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். துணைவேந்தர் ரவி தலைமை வகித்து பேசினார். சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் இயக்குனர் பவனந்தி வேம்பு கலந்து கொண்டார்.

