ADDED : ஆக 25, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஆக.
26 -
சேவுகன் அண்ணாமலை கல்லூரி நாட்டு நல பணி திட்டம், உடற் கல்வி துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தினர். முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் சந்தோஷ் முதலிடத்தையும், கணேசன் இரண்டாமிடமும், சஞ்சய் குமார், கோபிக்கண்ணன் மூன்றாமிடமும் வென்றனர். போட்டி நிறைவில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
