ADDED : ஆக 25, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, ஆக. 26-
காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவி மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரையில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காரைக்குடி வித்யாகிரி பள்ளி 5 ம் வகுப்பு வகுப்பு மாணவி ஹரிஷ்ணா சுசி இரண்டாமிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி முதல்வர் ஹேமமாலினி, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாராட்டினர்.
