ADDED : நவ 26, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார்.
மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்மோகன், கனகசுந்தரி, விஜயசங்கரி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலர் விக்னேஸ்வரன், வட்டார மேலாளர்கள் விக்னேஸ்வரி, கல்பனா, அமுதா, ராதா பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

