ADDED : நவ 11, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மேய்ச்சல் கால்நடை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட செம்மறி ஆடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டோரிடம், கால்நடை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.
கால்நடைத்துறை அலுவலர் தமிழ்செல்வி மேய்ச்சல் கால்நடை கணக்கெடுப்பதின் அவசியம் குறித்து விளக்கினார். தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் காந்தி, நிர்வாகிகள் சுதாகர், சுரேஷ் பங்கேற்றனர்.