ADDED : டிச 09, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கனரா வங்கி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொது மேலாளர் கிருஷ்ணா மோகன் தலைமை வகித்தார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், வாழ்ந்து காட்டுவோம் உதவி திட்ட அலுவலர் பிரபு முன்னிலை வகித்தனர்.
கனரா வங்கி மண்டல உதவி பொது மேலாளர்கள் முகம்மது ஆரீப், ராவ் கடனுதவி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.
இந்நிகழ்ச்சி மூலம் ரூ.8.5 கோடிக்கு தொழில் கடன் வழங்குவது என உறுதி செய்தனர்.