ADDED : ஜூன் 26, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்ட போலீஸ் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமை வகித்தார். அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் நளந்தம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தின்போது கல்லுாரி மாணவர்கள் போதை பொருளால் ஏற்படும் தீங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லுாரி முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார்.
கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலை வகித்தார். உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்துகொண்டனர். மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் போதையை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.