ADDED : ஆக 22, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.23
நாட்டரசன் கோட்டை கலாம் உதவும் கரங்கள் சார்பாக டூவீலரில் செல்லும் பொதுமக்கள் அவசியம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். டிஎஸ்பி அமல அட்வின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் காதர் மீரா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
