ADDED : அக் 27, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் முத்தையா மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் சமூக ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
எஸ்.ஐ., கோகிலா, தலைமை காவலர் மீனாட்சி சமூக வலைத்தளங்கள், ஊடகங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தனர்.
பேராசிரியர்கள் சரவணன், மாணிக்க நாச்சியார்,பாண்டிச் செல்வி, க்ளோரி, சௌமியன் ஒருங்கிணைத்தனர்.