ADDED : டிச 19, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
முதல்வர் விசுமதி தொடங்கி வைத்தார். சுகாதார கல்வியாளர் சுப்பாரெட்டி, அமைப்பு சாரா மருத்துவ அலுவலர்கள் சந்தான கிருஷ்ணன், சனாவுல்லா ஆகியோர் தொழுநோய் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினர்.

