UPDATED : நவ 14, 2026 06:06 PM
ADDED : நவ 14, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முன்னாள் சுங்கத்துறை உதவி ஆணையர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். லண்டன் முருகேசன் முன்னிலை வகித்தார். அறப்போர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பயிற்சி அளித்தார். மதுவந்தி பாரதி பங்கேற்றார். சாலைகள் மருத்துவமனை சார்ந்த பிரச்னைகள், உட்பட பொது செயல்பாடுகளில் ஊழல்களை வெளிப்படுத்தி தீர்வு காணும் வழிகளை பற்றி பட விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
