ADDED : செப் 20, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
சமூக நலத்துறையின் கீழ் மிஷன் சக்தி, மகளிர் அதிகார மையம் மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் நடக்கும் இடம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை, மகளிர் உதவி எண், பெண் குழந்தை காப்போம், கற்பிப்போம் போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்கான வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் அனைத்து பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வழங்கப்படும். இணை இயக்குனர் (மருத்துவம்) பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி பங்கேற்றனர்.