நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை வகித்தார். தாசில்தார் சேது நம்பு, சிறப்பு தாசில்தார் ஜெயநிர்மலா, தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கவிதை, பேச்சு, கோலப்போட்டி நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

