UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் டி.புதுார் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்து வருகிறது.
முகாமில் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி காசநோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் கீதாஞ்சலி காசநோய் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணா, ராதா, ஆசிரியர் அழகர்சாமி, திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
