/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அன்னவாசலில் முதல் மரியாதைக்கு தடை: வருவாய்த்துறை உத்தரவு
/
அன்னவாசலில் முதல் மரியாதைக்கு தடை: வருவாய்த்துறை உத்தரவு
அன்னவாசலில் முதல் மரியாதைக்கு தடை: வருவாய்த்துறை உத்தரவு
அன்னவாசலில் முதல் மரியாதைக்கு தடை: வருவாய்த்துறை உத்தரவு
ADDED : ஜன 15, 2024 10:55 PM
மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னவாசல் புதூரில் மாடு அவிழ்த்து விடும் விழாவில் முதல் மரியாதை வழங்கும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதால் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மானாமதுரை அருகே அன்னவாசல் புதூரில் உள்ள அழகு மீனாள் அம்மன் கோவில் பொங்கல் விழாவின் போது மாடு அவிழ்த்து விடுவது வழக்கமாக உள்ளது.
இதில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தற்போது பிரச்சினை ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதினால், கடந்த 11ம் தேதி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விழாவை எவ்வித பிரச்சனையுமின்றி இரு தரப்பினரும் நடத்த ஒத்துழைப்பு கொடுத்தால் விழாவை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவிக்காமல் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் விழாவில் உரிய நிபந்தனைகளுக்குட்பட்டு இருதரப்பினரும் பங்கேற்றால் மட்டுமே அனுமதி தரப்படும்.
இரு தரப்பினர் இடையே முடிவு எட்டாப்படாத நிலை வந்தால், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும்விதமாக விழாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும் என தாசில்தார் ராஜா தெரிவித்துள்ளார்.