/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் கருகும் வாழை: விவசாயிகள் வேதனை
/
மானாமதுரை, இளையான்குடியில் கருகும் வாழை: விவசாயிகள் வேதனை
மானாமதுரை, இளையான்குடியில் கருகும் வாழை: விவசாயிகள் வேதனை
மானாமதுரை, இளையான்குடியில் கருகும் வாழை: விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 30, 2025 05:29 AM

மானாமதுரை: மானாமதுரை இளையான்குடி பகுதியில் வாழைக்கு போதிய தண்ணீர் இருந்தும் இலைகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர், ஆலம்பச்சேரி,வேலடிமடை,இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர்,கோச்சடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழை இலை ஒரு கட்டு ரூ. ஆயிரத்திற்கும், வாழை தார் ரூ. 500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலநெட்டூர்,கீழநெட்டூர் சுற்று வட்டார கிராம பகுதியில் வாழை கன்று நடப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில் வாழை இலைகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கீழநெட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறியதாவது: மேற்கண்ட கிராமங்களில் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் வாழை மரங்களுக்கு போதிய தண்ணீர் இருந்தும், உரம் போட்டும் இலைகள் கருகி வருகின்றன. தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வாழை இலைகள் கருகுகிறதா அல்லது வேறு பூச்சி தாக்குதலா என்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.