ADDED : மார் 21, 2025 07:00 AM

சிவகங்கை : சிவகங்கையில் பணிநிரந்தரம், வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து இந்திய வங்கி அதிகாரி, ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் ரம்யா தலைமை வகித்தார். எஸ்.பி.ஐ., ஊழியர் சங்க நிர்வாகி செல்வகருப்பச்சாமி, பாங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் வினோத், கனரா வங்கி ஊழியர் சங்க நிர்வாகி விஜய சூர்யபிரகாஷ், யூனியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஜி.சக்திவேல், இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஞானசுந்தர் உள்ளிட்ட அனைத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய வங்கிகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என அமல்படுத்த வேண்டும். ஊழியர், அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.
புதிய பணி நியமனம் செய்யவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை இந்தியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.