/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உழவர் சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்
/
உழவர் சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்
உழவர் சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்
உழவர் சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்
ADDED : அக் 16, 2025 11:44 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் உழவர் சேவை மையம் துவக்க விவசாயிகளுக்கு 30 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சத்தியா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம் செயல்படுத்த அரசு ரூ.42 கோடி ஒதுக்கி யுள்ளது. ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்ட தாரிகள், 600 டிப்ளமோ முடித்தவர்கள் வேளாண் கல்வியை முடிக்கின்றனர்.
இவர்களது கல்வியை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக தமிழக அளவில் 1000 உழவர் நல சேவை மையம் அமைத்திட நடவடிக்கை எடுத்து உள்ளது. மையம் ரூ.10 முதல் 20 லட்சம் மதிப்பில் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வழங்கப்படும்.
இம்மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்கள் விற்பனை செய்வதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும். மேலும் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருட்கள், மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்டத் திற்கு இத்திட்டத்தில் 5 மையம் ஏற்படுத்த ரூ.18 லட்சம் இலக்கு நிர் ணயித்துள்ளனர். இதில், 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடி யினருக்கு முன்னுரிமை உண்டு. இத்திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கையை வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி ஒப்புதல் கிடைத்த தும் மானியம் பெற AGRISNET என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.