/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வங்கிகளில் போலி நகைகளை வைத்து பணம் பெற்று மோசடி
/
வங்கிகளில் போலி நகைகளை வைத்து பணம் பெற்று மோசடி
ADDED : அக் 21, 2025 03:37 AM
திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் இயங்கும் வங்கிகளில் போலி நகைகளை அடமானமாக வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாலுகாவில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. திருப்புவனம் மற்றும் கிராமப்புறங்களில் தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகள், அடகு நகை கடைகள் செயல்பட்டு வருகின்றன . பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவது, பணம் சேர்ந்த உடன் நகைகளை மீட்பது வழக்கம். சமீப காலமாக வங்கிகளில் போலி நகைகளை அடமானமாக வைத்து பணம் பெற்று வருகின்றனர்.
வங்கி அலுவலர்களும் போலி நகை என தெரிந்ததும், போலீசில் புகார் அளிக்காமல், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி பணம் செலுத்தி நகைகளை போலி நகைகளை வாங்கி செல்ல வைக்கின்றனர். வங்கிகளில் வட்டி குறைவு என்பதால் அங்கு நகைகளை அடமானமாக வைத்து பணம் பெறுகின்றனர். சில ஆண்டிற்கு முன் திருப்புவனம், மானாமதுரையில் வங்கிகளில் போலி நகை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடி சம்பவம் நடந்தது. இதில், போலீசார் வழக்கு பதிந்து 3 பேர்களை கைது செய்தனர். அதற்கு பின் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் வங்கிகளை நாடி போலி நகைகள் வருவதாக தெரிவித்தனர்.