/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தடை செய்யப்பட்ட புகையிலை சிவகங்கையில் விற்பனை தாராளம்; மொத்த விற்பனையாளர் மீது நடவடிக்கை இல்லை

ADDED : ஆக 16, 2025 11:53 PM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை,பான் மசாலா, குட்கா பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு புகையிலை ,பான் மசாலா ,குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்க தடை விதித்துள்ளது. எனினும் மாவட்டத்தில் ஏராளமான கடைகளில் திருட்டுத்தனமாக இந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகள், டீக் கடைகளில் அடைமொழி வைத்து இந்த பொருட்கள் விற்கப்படுகின்றன.
கூல் லிப் உள்ளிட்டவற்றை பள்ளி கல்லுாரி மாணவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
பள்ளி கல்லுாரி அருகாமையில் உள்ள கடைகள், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகள், கிராமபுறங்களில் உள்ள கடைகளில் அதிகம் விற்கின்றனர்.
போலீசாரும் தொடர்ந்து சோதனை நடத்தி கடைகளுக்கு அபராதம் விதித்தாலும் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பதால் சிலர் இந்த தொழிலை விடுவதில்லை.
அலைபேசியில் ஆர்டர் மூலமாகவே டூவீலரில் வணிகம் செய்கின்றனர்.
மாவட்ட போலீசார் இவற்றை கண்காணிக்க வேண்டும். குட்கா பான் மசாலா விற்பனையை தடை செய்துள்ள அரசு மொத்த விலை சந்தையில் நுாதனமாக விற்கும் போக்கை கண்டு கொள்வதில்லை.
சோதனை என்ற பெயரில் வணிகர்கள் மீது கடுமை காட்டும் அதிகாரிகள் மொத்த விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது பரிவு காட்டுகின்றனர்.
அரசு தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் தயார் செய்யும் நிறுவனங்களை மூட வேண்டும். அப்போதுதான் இவ்வாறான பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.