/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சித் தலைவர்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் அடிப்படை வசதி
/
ஊராட்சித் தலைவர்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் அடிப்படை வசதி
ஊராட்சித் தலைவர்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் அடிப்படை வசதி
ஊராட்சித் தலைவர்கள் இல்லாததால் கேள்விக்குறியாகும் அடிப்படை வசதி
ADDED : ஆக 26, 2025 03:49 AM
காரைக்குடி: தமிழகத்தில் ஊராட்சி தலைவர்களின் பதவிக் காலம் முடிந்ததால், கிராமங்களில் மின் விளக்கு, சாலை உட்பட அடிப்படை வசதி முறையாக கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் 2019ம் ஆண்டு, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் கிராம பகுதிகளுக்கு தேவையான மின்விளக்கு, சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வந்தது.
தவிர, ஏழை மக்களும் தங்களுக்கு தேவையான, பல்வேறு உதவிகளை ஊராட்சி தலைவர்கள் மூலம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரியில் ஊராட்சி தலைவர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்தந்த ஒன்றியத்தில் உள்ள ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பணிகள் நடந்து வருகிறது.
கடைக்கோடி கிராமங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. கிராம மக்கள் நேரிடையாக சென்று புகார் அளித்தால் மட்டுமே பிரச்னைகள் சரி செய்யப் படுகிறது.
அலுவலகங்களுக்கு சென்று புகார் அளிக்க முடியாத பல கிராமங்கள் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. சாலை பணி நடைபெறாமல் கற்சாலையாக காட்சியளிக்கிறது.