UPDATED : ஆக 16, 2026 06:36 PM
ADDED : ஆக 16, 2026 06:22 PM
திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் தெருவிளக்கு,குடிநீர் பொதுக்குழாய்,மயான வசதி அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
சிங்கம்புணரி ரோட்டிலிருந்து 2 கி.மீ.துாரத்தில் இக்கிராமம் உள்ளது. பஸ்சில் வந்து செல்பவர்கள் இறங்கி விலக்கு ரோட்டில் நடந்து கிராமத்திற்கு வருகின்றனர்.இந்த விலக்கு ரோட்டில் இரவில் போதிய வெளிச்சமின்றி மக்கள் பயப்படுகின்றனர். இருபக்கமும் வயல் உள்ளதால் விஷப்பூச்சிகள் ரோட்டில் நடமாடுகின்றன.
மேலும், மணக்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 5 பொதுக்குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது குடியிருப்பு அதிகரித்து பொதுமக்களும் அதிகரித்து விட்டனர். அதற்கேற்ப கூடுதல் குடிநீர் பொதுக்குழாய் அமைக்க வேண்டியுள்ளனர். இக்கிராமத்தில் தற்போது சுடுகாடு அல்லது மயானம் ஏதுமில்லை. இதனால் வேறிடத்திற்கு சென்று இறுதிச்சடங்கு செய்ய சிரமமாக உள்ளது. மழைகாலத்தில் அவதிப்பட வேண்டியுள்ளது. இதனால் மயான வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளனர்.
