ADDED : ஏப் 15, 2025 05:54 AM
சிவகங்கை: சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் தங்கி பயிற்சி பெற உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடைப்பந்து பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இப்பயிற்சி மையத்தில் தலா 20 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற உள்ளனர். அவர்களுக்கு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பயிற்சி உபகரணம், சீறுடைகள் வழங்கப்படும்.
கூடைப்பந்து பயிற்றுநராக சேர முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்று அல்லது டிப்ளமோ சான்று அல்லது உடற்கல்வி பல்கலையில் முதுநிலை டிப்ளமோ அல்லது சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தும் நிறுவனத்தில் 6 வார சான்று படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இங்குதேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு மாதம் ரூ.25,000 சம்பளம்வழங்கப்படும். வயது 50க்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஏப்.,20 அன்று மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் இங்கு தலா 20 மாணவர், மாணவிகள் சேர்க்கைக்கு வயது 12 முதல் 21க்குள் இருத்தல் வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கு ஏப்., 24 அன்று விளையாட்டு அரங்கிற்கு நேரில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.