/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முட்செடிக்குள் வீணாகும் பேட்டரி வாகனம்
/
முட்செடிக்குள் வீணாகும் பேட்டரி வாகனம்
ADDED : நவ 06, 2025 07:23 AM

திருப்புவனம்: மத்திய அரசின் துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் குப்பை அள்ள கடந்த ஆகஸ்டில் வழங்கப்பட்ட 350 பேட்டரி வாகனங்கள் இன்று வரை வழங்கப் படாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வெயிலிலும் மழையிலும் நிறுத்தப்பட்டு வீணாகி வருகிறது.
சுகாதாரத்தை மேம் படுத்த மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருவதுடன் சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு 350 பேட்டரி வாகனங்கள் கடந்த ஆகஸ்டில் வழங்கப் பட்டது.
இரண்டு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள இந்த பேட்டரி வாகனங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங் களுக்கு ஆகஸ்டில் வழங்கப்பட்டன. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 90 லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 35 பேட்டரி வாகனங்களும், ஒரு டிராக்டரும் வழங்கப்பட்டது.
இந்த புதிய பேட்டரி வாகனங்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேட்டரி வாகனங்களை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறிவிட்டது. இன்று வரை இந்த வாகனங்கள் வழங்கப்படவில்லை.
அதிகாரிகள் கூறுகையில், வாகனங்களை ஊராட்சிகளுக்கு வழங்க அமைச்சர் தலைமையில் விழா நடைபெற உள்ளது. அமைச்சரின் தேதி கிடைக்காததால் வாக னங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என்றனர்.

