/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகு போட்டி
/
மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகு போட்டி
ADDED : செப் 01, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: காரைக்குடியில், நாட்டு இன மாடுகளை பாதுகாத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, நாட்டு இன மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகு போட்டி நடந்தது.
வைரபுரம் செல்வவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு குடியிருப்போர் சங்கம் சார்பில் இப்போட்டி நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்றன. காளைகளின் உடல் கட்டமைப்பு, கொம்பு, வாலின் தன்மையை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்து பரிசு அளித்தனர்.
//