ADDED : நவ 22, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில்மாணவர் சேர்க்கையை அதிகரித்தது, ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஆங்கில வழியில் எண்ணும் எழுத்தும் பயிற்று முறையில் சிறப்பாக கற்பித்ததற்காக குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பள்ளி கல்வித் துறைதேர்வு செய்தது.
இதற்கான கேடயத்தை பள்ளி தலைமையாசிரியர் செல்வமலர், உதவி ஆசிரியர்கள் சந்திரலேகா, ஆரோக்கிய ஜெஸி உள்ளிட்ட ஆசிரியர்கள் குழந்தைகள் தினத்தன்று பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பெற்றனர். நேற்று சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேடயத்துடன் சென்று வாழ்த்து பெற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி புவனேஸ்வரன், வட்டார கல்வி அலுவலர் பாலாமணி கலந்து கொண்டனர்.