/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 27, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அக். 24 அன்று மாலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 9:45 மணிக்கு கோயில் விமானம், பத்ரகாளியம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை கிருங்காக்கோட்டை நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

