/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரணியூரில் பத்ரகாளியம்மன் கோயில் ஊரணி குடிநீருக்கு ஆதாரம்
/
இரணியூரில் பத்ரகாளியம்மன் கோயில் ஊரணி குடிநீருக்கு ஆதாரம்
இரணியூரில் பத்ரகாளியம்மன் கோயில் ஊரணி குடிநீருக்கு ஆதாரம்
இரணியூரில் பத்ரகாளியம்மன் கோயில் ஊரணி குடிநீருக்கு ஆதாரம்
ADDED : ஏப் 23, 2024 12:09 AM

இந்த ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் ஏராளமான குடிநீர் ஊரணிகள், குளங்கள் உள்ளன. அருகில் உள்ள கண்மாய்களில் இருந்து வரும் நீர்வரத்து, ஊரணிகளின் நீர்பிடிப்பை உயர்த்துகின்றன.
இந்த ஊரணிகளை பிரித்து குளிக்க, குடிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் அரசால் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
இன்றைக்கு பெரும்பாலான ஊரணி, கண்மாய்கள் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் கிராமங்களில் ஊரணி நீர் எடுக்கு முடியாதநிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான கிராமங்களில் இன்றைக்கும் கிராம மக்கள் ஒத்துழைப்புடன், குடிநீர் ஊரணிகளை பாதுகாத்து வருகின்றனர்.
என்னதான் தண்ணீர் வசதி செய்தாலும், ஊரணியில் கிடைக்கும் நீரை எடுத்து சமைக்க, குடிக்க பயன்படுத்துவதில் இருந்து மக்கள் இன்னும் மாறவில்லை.
இதற்காக பல கி.மீ., துாரம் நடந்து செல்லக்கூட மக்கள் தயங்குவதில்லை. அந்த வகையில் இரணியூரில் உள்ள குடிநீர் ஊரணியில் பல கிராமத்தினர் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.
இரணியூரில் பத்ரகாளியம்மன் கோயில் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் உள்ள நீரைத் தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இரணியூர், செண்பகம்பேட்டை, கீழக்காவிணிப்பட்டி, அயினிப்பட்டி, நாகலிங்கம்பட்டி, அம்மாப்பட்டி, மார்க்கண்டேயன்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்கின்றனர். கிராமத்தினர் பராமரிப்பினால் கோடையிலும் இவர்களுக்கு குடிநீர் கிடைக்கிறது.
இது குறித்து இரணியூர் ஆறுமுகம் கூறியதாவது: இங்கு ஆழ்துழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.
ஆனால் சமைக்க, குடிக்க பயன்படுத்துவதில்லை. அதேநேரம் ஊரணி தண்ணீர் தான் பாரம்பரியமாக பயன்படுத்துகிறோம். அடிக்கடி துார்வாரி பராமரிப்பதால் கோடையிலும் வற்றாத நீர் கிடைக்கிறது.
சமையலுக்கு ஏற்றவகையில் இருப்பதால் அதிகளவில் ஊரணி தண்ணீரை எடுத்து செல்கிறோம். ஊரணி நீரில் சூரியக்கதிர்கள் படுவதால் சுவை தருவது மட்டுமின்றி, உடல் நலம் பேணவும் உதவுகிறது.

