/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.1.22 கோடியில் ஊருணி மேம்பாட்டிற்கு பூமி பூஜை
/
ரூ.1.22 கோடியில் ஊருணி மேம்பாட்டிற்கு பூமி பூஜை
ADDED : பிப் 24, 2024 05:02 AM
திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் அருகே கீழக்கோட்டையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ 1.22 கோடியில் ஊருணி மேம்பாட்டிற்கு பூமி பூஜை நடந்தது.
காளையார்கோயில் ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சி கீழக்கோட்டையில் 2 ஏக்கரில் அய்யனார் குடிநீர் ஊருணி உள்ளது. ஊரணியின் தடுப்புச்சுவர் சரிந்து விட்டது. ஊரணியை பராமரிக்க கிராமத்தினர் கோரினர். ஊருணியை நமக்கு நாமே திட்டத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. நிதியுதவியாக ரூ.61 லட்சத்திற்கான காசோலையை தேவகோட்டை செந்தில்முருகன், கண்டரமாணிக்கம் லெ.நா.சண்முகசுந்தரம்,கல்லல் ஆர்.நல்லப்பன் ஆகியோர் கலெக்டரிடம் கடந்த டிச.19 ல் வழங்கினர். இதனையடுத்து ரூ 1.22 கோடி மதிப்பீட்டில் ஊருணியை மேம்படுத்த திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது.
பணிகளை துவக்க ஊருணியில் பூமிபூஜை நடந்தது.
நன் கொடையாளர்கள் செந்தில்முருகன், லெ.நா.சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் வடிவேலு, சோலைநாராயணன், ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
ஊருணியின் வடிவை சதுரப்படுத்தி, தூர் வாரி, படித்துறையை சீரமக்கவும், உள் சுற்றுக்கட்டு கட்டவும், ஊருணி போக மீதமுள்ள இடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.