ADDED : ஆக 24, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.25-
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் காஞ்சி சங்கர மடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது.
தலைவர் அனந்தராமன், துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், குமார், சேதுராமன், செயலாளர் வைத்தியநாதன், தமிழ்நாடு பிராமண சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டனர். பூஜையை விக்னேஷ் சாஸ்திரி, ஹரிஹர கனபடிகள், சேதுராம வாத்தியார் நடத்தினர். பொருளாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
