ADDED : ஜூன் 17, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் அருண் பிரசாந்த் 32. இவர் நேற்று காரைக்குடி அருகேயுள்ள சூரக்குடியில் நடந்த விழாவில் பங்கேற்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி உள்ளார். திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பிய போது கானாடுகாத்தான் பகுதியிலிருந்து வந்த லாரி, பைக்கில் மோதியது.
இதில் அருண் பிரசாந்த் உயிரிழந்தார். செட்டிநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.