/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்
/
முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்
ADDED : ஜூலை 30, 2025 10:02 PM
காரைக்குடி; தமிழகம் முழுவதும் அரசு விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட உள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன.
விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக காட்டுவது, கூடுதல் உணவு தொகை பெற்று முறைகேடு செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார் வந்தது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அனைத்து விடுதிகளிலும் இம்முறையை பயன்படுத்த கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு உட்பட அனைத்து பள்ளி கல்லூரி விடுதிகளில், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.