/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜன.27, 28ல் பறவைகள் கணக்கெடுப்பு
/
ஜன.27, 28ல் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 21, 2024 03:33 AM
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பை ஜன.27 லிருந்து 2நாட்கள் நடத்த உள்ள வனத்துறையினர் அதில் பங்கேற்க தன்னார்வலர்கள்,பறவை ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 25 ஈர நிலப்பகுதிகளிலும், பறவைகள் வலசை வரும் வேட்டங்குடி சரணாலயம் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு ஜன.27ல் நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ,மாணவியர், தன்னார்வலர்கள், போட்டோகிராபர்கள், பறவை ஆர்வலர்கள் birdscensussivagangai@gmail.com என்ற இ.மெயிலுக்கோ, அலைபேசி 79040 59905 எண்ணிலோ ஜன.25க்கு முன்பாக பதிவு செய்ய வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மாவட்ட வன அலுவலர் செ.பிரபா கூறுகையில், பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

