/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி நிர்வாகத்தில் முன்னாள் தலைவர்கள் தலையீடு அதிகரிப்பு கலெக்டரிடம் பா.ஜ., புகார்
/
ஊராட்சி நிர்வாகத்தில் முன்னாள் தலைவர்கள் தலையீடு அதிகரிப்பு கலெக்டரிடம் பா.ஜ., புகார்
ஊராட்சி நிர்வாகத்தில் முன்னாள் தலைவர்கள் தலையீடு அதிகரிப்பு கலெக்டரிடம் பா.ஜ., புகார்
ஊராட்சி நிர்வாகத்தில் முன்னாள் தலைவர்கள் தலையீடு அதிகரிப்பு கலெக்டரிடம் பா.ஜ., புகார்
ADDED : மே 25, 2025 11:06 PM
சிவகங்கை: பதவிக்காலம் முடிந்தும் வாகனங்களில் ஊராட்சி தலைவர் பெயர் பலகை, நிர்வாகத்தில் முன்னாள் தலைவர்கள் தலையீட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் பா.ஜ., வினர் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 445 கிராம ஊராட்சிகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி தலைவர், கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்தனர். இவர்களது பதவிக்காலம் ஜன., 5 ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இருப்பினும், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஊராட்சிகள் சட்ட விதிப்படி ஊராட்சி தலைவர் பதவி, பெயரை குறிப்பிடும் விதமாக வாகனங்கள், பொது இடங்களில் தலைவர் பெயர்கள் இடம் பெறக்கூடாது. ஆனால், இம்மாவட்டத்தில் இச்சட்ட விதிகளை முன்னாள் ஊராட்சி தலைவர்களும் பின்பற்றுவதில்லை.
அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால், இன்றைக்கும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் செயலர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாத அளவிற்கு, முன்னாள் ஊராட்சி தலைவர்களின் தலையீடு அதிகரிக்க தான் செய்கிறது.
குறிப்பாக வீட்டு மனைப்பிரிவு ஒப்புதல், பிளான் அப்ரூவல், வீட்டு வரி ரசீது போடுதல் உள்ளிட்ட அனைத்து வருவாய் சார்ந்த பணிகளிலும் முன்னாள் ஊராட்சி தலைவர்களின் தலையீடு அதிகரித்து தான் உள்ளது. குறிப்பாக இன்றைக்கும் சொந்த வாகனங்களில் ஊராட்சி தலைவர் என போக்குவரத்து வாகன விதியை மீறி எழுதி தான் வைத்துள்ளனர். அதே போன்று நிர்வாகத்திலும் முன்னாள் தலைவர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பா.ஜ., சிவகங்கை கிழக்கு ஒன்றிய தலைவர் எம்.நாட்டரசன், கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 ன் படி பதவிக்காலம் முடிந்த பின்னரும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வாகனம், பொது இடங்களில் குறிப்பிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.