ADDED : அக் 08, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கையில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியநாதன், ராஜேந்திரன், சொக்கலிங்கம், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்.13 அன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நகர் தலைவர் உதயா, ஒபிசி அணி மாநில பொதுச்செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத், கந்தசாமி, சுகனேஸ்வரி, நகர் செயலாளர் பாலா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.