ADDED : அக் 29, 2025 09:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:  சிவகங்கையில் பா.ஜ., சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். அமைப்பாளர் சத்தியநாதன், இணை அமைப்பாளர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக வேட்பாளர் வெற்றி பெற ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்புக்காளை, மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, பொதுச் செயலாளர் பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

