நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சாத்தரசன்கோட்டையில் பா.ஜ.,தெற்கு ஒன்றியம் சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர்கள் காளைராஜன்,பாண்டி விவசாய அணி பொதுச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் சத்தியநாதன் சாதனைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், முருகேசன், சிவகங்கை நகர் தலைவர் உதயா, நாகேஸ்வரன், ராஜ், வடிவேலு கலந்து கொண்டனர்.
இலவச எரிவாயு அடுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

