/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திராவிட கட்சிகளின் பாணியில் தேர்தல் பணியை துவக்கிய பா.ஜ.,
/
திராவிட கட்சிகளின் பாணியில் தேர்தல் பணியை துவக்கிய பா.ஜ.,
திராவிட கட்சிகளின் பாணியில் தேர்தல் பணியை துவக்கிய பா.ஜ.,
திராவிட கட்சிகளின் பாணியில் தேர்தல் பணியை துவக்கிய பா.ஜ.,
ADDED : மார் 21, 2024 01:59 AM
சிங்கம்புணரி: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் முதன் முறையாக திராவிட கட்சிகளின் பாணியில் தேர்தல் பணிகளை பா.ஜ., துவக்கியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விதமாக திருமங்கலம் பார்முலா என்ற ஒன்று உருவானதற்கு பிறகு கட்சிகளின் தேர்தல்பணிகளின் நிலையே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. முன்பெல்லாம்சராசரியாக ஆயிரம் ஓட்டுகள் கொண்ட ஒருஓட்டு சாவடிக்கு ஐந்து முதல் பத்து பேர் கொண்ட பூத் கமிட்டி மட்டுமே தேர்தல் பணிகளை கவனிக்கும். அதிகபட்சம் பூத் கமிட்டிக்கு டீ, டிபன், சாப்பாடு என்ற செலவு மட்டுமே இருக்கும்.
கடந்த சில தேர்தல்களில் சில இடங்களில் திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்து ஓட்டுகளை வாங்கி வருகின்றன. இதற்காக வாக்காளர் பட்டியலின் ஒரு பக்கத்திற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவர். அப்பக்கத்தில் உள்ள 30 ஓட்டுகளுக்கும் அவரே பொறுப்பு.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் மூலமாக கவனிப்பு நடக்கும். கண்காணிப்பதற்கு ஒருவர் உடன் வருவார். 70 முதல் 80 சதவீத ஓட்டுகள் வரை கவனிக்க இலக்கு நிர்ணயிக்கப்படும். லோக்சபா தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் இது பிரபலம்.
கவனிப்பு நடப்பது தெரிந்தும் அதை தடுக்க முடியாமல் தேர்தல் அலுவலர்கள் திணறுவதை காணலாம். இந்நிலையில் திராவிட கட்சிகளைப் போல் பா.ஜ., வினரும் அதே பாணியில் வாக்காளர் பட்டியல் பக்க பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றனர்.
சராசரியாக 30 ஓட்டுகள்கொண்ட அந்த பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ஓட்டு சேகரிக்கவும், தங்கள் கட்சி கூட்டணிக்கு சாதக பாதகமான ஓட்டுகளின் விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக தாங்கள் மட்டுமே இது போன்ற பணியில் ஈடுபடும் நிலையில் பா.ஜ.,வும் தங்கள்பாணியில் தேர்தல்பணியை கவனிக்கத் தொடங்கியதால் திராவிட கட்சிகளுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவர்களும் வாக்காளர்களை கவனிப்பார்களோ என்ற ஒரு திகைப்பு அவர்களுக்குள் நிலவுகிறது.
பா.ஜ., நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கும்போது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பா.ஜ., வின் வழக்கமல்ல, மோடி அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்லவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள், தேர்தல் பணியில் எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ, நாமும் அதே ஆயுதத்தை கையில் எடுத்தால் தான் அவர்களை வீழ்த்த முடியும், என்றனர்.

