நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் அழகப்பா பல்கலை என்.சி.சி., சுகாதார மையம், என்.எஸ்.எஸ்., இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
முதல்வர் சுந்தர் வரவேற்றார். பதிவாளர் செந்தில் ராஜன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் மணிமாறன், டாக்டர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.