நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி நேஷனல் பயர் அண்டு சேப்டி கல்லுாரி, நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.
நேஷனல் கல்வி குழும தாளாளர் சையது தலைமையேற்றார். தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி இந்திய செஞ்சிலுவை சங்க ரத்த தான ஒருங்கிணைப் பாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் தன சீலன் வரவேற்றார்.
நமது உரிமை பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் முகமது ஆசிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.